Friday, August 19, 2011

பாதை காட்டி


புலம்பெயர்ந்த நாட்டில் தமிழ் மொழியைக் கற்கும் தமிழ் சிறார்களுக்காக தமிழ் மொழிப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கும் யசோதா.பத்மநாதனால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது இந்தப் பக்கம்.

உலக மொழிகளினூடாகத் தமிழை அணுகும் தமிழ் சிறார்களின் பார்வைகளின் பரிநாமங்களை; சிந்தனை வீச்சுக்களை எந்த வித சிதைவுகளோ சிந்தனைச் செல்வாக்குகளோ இல்லாமல் தமிழுக்குத் தருவது இப்பக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

மேலும்,பெரும்பாலான முதலாம் உலக நாடுகளின் கற்பித்தல் முறையோடு தமிழை உயர்த்துவதும் தமிழை அதன் பண்பாட்டு விழுமியங்களை புலம்பெயர்ந்த நாடுகளின் மொழியை தம் முதலாம் மொழியாகக் கொண்டுள்ள மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் அவர்களின் கற்கும் ஆவலை வசீகரமான முறையில் வழிப் படுத்துவதற்குமாக இப்பக்கம் தனிப்பட்டமுறையில் அங்குரார்ப்பனம் செய்யப்பட்டுள்ளது.

இம்மாணவர்களுக்குத் தமிழ் இரண்டாம் மொழி என்பதை மனதில் கொண்டு அவர்களின் இக்கன்னி முயற்சிகளுக்கு இங்கு வரும் எல்லோரும் உங்கள் கருத்துக்களை அவர்களின் ஆக்கங்களுக்கு வழங்கி அவர்களை உற்சாகப் படுத்துமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

view my complete profile என்ற இடத்தை கிளிக் பண்ணினால் இரண்டு ’இளந்தமிழன்’ என்ற பதிவுப் பக்கம் தென்படும்.அதில் முதலாவது ‘இளந்தமிழன்’ என்பதைக் கிளிக் பண்ணினால் என் மாணவர்களின் பதிவுகளை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு பதிவுகளின் இறுதியிலும் comments என்ற இடம் தென்படும். அதனை கிளிக் பண்ணி உங்கள் அபிப்பிராயங்களை ஆங்கிலத்திலோ தமிழிலோ தரலாம்.

ஊர் கூடித் தேரிழுப்போம் வாரீர்!

நன்றி.